மாணவர்கள் போரட்டமும், புரிதல்களும்:
இக்கட்டுரை முழுக்க
முழுக்க என் அனுபவத்தின் பேரிலும், இப்போரட்டத்தை தொடர்ந்து அவதானித்து வரும் ஒரு மாணவனின்
பதிவு.. யாருடைய கருத்தும் திருடப்படவில்லை, திணிக்கப்படவில்லை.
மார்ச் 8ல் லயோலா
கல்லூரியில் 8 மாணவர்களுடன் ஆரம்பித்த இப்போராட்டம், இன்று தமிழக அரசுக்கே மிகப்பெரும்
அச்சுறுத்தலான நிலையில் உள்ளது. கருணாநிதி காலத்தில் அறிவிக்கப்பட்ட அதே காலவரையற்ற
விடுமுறை அறிவிக்கப்பட்டது(இருகட்சிகளுக்கும் உள்ள் ஒற்றுமை வியப்பளிக்கிறது.). தமிழ்நாட்டின்
அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆரம்பித்த இப்போராட்டம் இன்று பொறியியல்
மற்றும் மருத்துவ மாணவர்களின் பங்களிப்புடன் மிகவும் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது.
தினம் ஒரு கல்லூரி,
தினம் ஒரு தலைவர் கருத்து என் செய்தித்தாள்களும் தங்கள் பகுதியை சிறப்பாகவே செய்து
வருகிறது.
மாணவர் போராட்டம் மகத்தானது, ”சமூக புரட்சி” என்று முறிக்கிக் கொண்டிருக்கும்
சமூக ஆர்வலர்களும், தன்னுடைய முகபுத்தகத்தில் I like tamizheelam என்று கீறிக்கொண்டிருக்கும்
அன்பர்களும், சென்ற இடங்களுக்கெல்லாம் பேருரை ஆற்றும் அரசியல்வாதிகளும் உண்மையை உணராமல்
உணர்ச்சிப் பெருக்கில்தான் உள்ளனர். மாணவர் போராட்டம் சக்தி வாய்ந்தது, அவர்கள் நினைத்தால்
எதையும் மாற்றி விடலாம் என்பது வெறும் வெற்றுக்காவியம் தான்.
இங்கு வந்த புத்தபிக்குகளை
அடித்தால் இலங்கயையே அடித்துவிட்டதாக எண்ணிக்கொள்ளும் மன்நிலை எள்ளளவிலும் இலங்கை சிங்களவர்களுக்கு
குறைந்தது இலலை. இதனால் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ஏற்படும், இன்னல்களை இவர்கள்
உணர்ந்தார்களா என்பது அவரவர்க்கே வெளிச்சம்.
அந்நிகழ்வு நடந்த
மறுநாள் காலை இலங்கைத்தமிழ் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் அம்மா
அங்கு தான் பயந்து கொண்டிருப்பதாகவும், என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் கூறியதாக
நண்பர் கூறினார். ( சத்தியமாக நான் வேறு விசயங்களைத் தான் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்)
இப்போரட்டத்தில் கல்ந்து கொண்ட மாணவர்களின்
உளவியலை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின்
நோக்கங்கள்.
- தங்கள் சார்ந்தக் கட்சிக் கொள்கைக்காக,
- தங்களின் பிரதான தலைவன் தன்னை பார்க்க வருவதற்காக,
- கூட்டத்தில் நாம் இல்லை எனில் நம்மை தமிழீன துரோகி என்று கூறிவிடுவார்களோ! என்ற பயத்திற்காக,
- நானும் போரட்டத்தில் கலந்து கொண்டேன் என்பதற்காக,
- நண்பர்கள் அழைத்ததற்காக,
- முகப்புத்தகத்தில் தன்னுடைய புகைப்படத்தை பதிவிறக்கம் செய்வதற்க்காக,
- ஏதே கூட்டம் நடைபெறுகிறது நாமும் கலந்து கொள்ளலாம் எனபதற்காகவும் மட்டும்தான்.
(நண்பர்கள் கோபடக்கூடாது, இருப்பினும் உண்மை
உண்மை அல்லவோ!)
இந்த காரணிகளோடு
நாம் மிகவும் உற்று நோக்க வேண்டிய முக்கியமான விசயம், இப்போராட்டத்தில் பங்கு பெற்ற
பின் அவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள்.
அவர்களிடம் ஒரு
விதமான துடிப்பும், எதற்கும் கேள்வி கேட்கும் உரிமையும் உருவாகியுள்ளது. அதே நேரத்தில்
போராட்டத்தில் பங்கு பெறாதவர்களை கேவலமான நோக்கில் பார்ப்பதும் தொடங்கியுள்ளது.
ஒரு 5 நாட்களுக்கு
முன்பு சைக்கிளை எடுத்துக்கொண்டு அவசரமாக ஒரு 9மணி அளவில் ஒரு 4 மணாவர்கள் விரைந்து
சென்று கொண்டிருந்தனர் (என் பக்கத்து அறைக்காரர்கள்). என்னவென்று விசாரித்தால் அவர்களின்
போராட்டத்தை ஒரு மாணவன் கிண்டல் செய்து விட்டானாம். அவனிடம் சண்டை போடுவதற்காகத்தான்
அவர்கள் சென்றார்களாம்.
இவ்விதமான் மனநிலையோடு அவர்கள் நடத்திய பந்த்
சில கேள்விகள்
நான்கு நாட்களுக்கு
முன்பு பாண்டிச்சேரியில் நடைபெற்ற பந்த் ல் தான் சில பகுதிகளில் பொறுப்பாக பார்த்துக்
கொண்டதாகவும், அங்கு இருக்கும் மதுக்கடைகளை தான் நேரடியாக சென்று மூடச்செய்த்தாக்வும்
சொல்லிக்கொண்டார். (நண்பா மன்னிச்சுக்கோ, எனக்கு
வேற வழி இல்ல) ஆனால் அடுத்த 2நாட்களில் அவர் மது அருந்தினார் என்பதுதான் முரண்.
பந்த அவர்களுக்கு விளம்பரம். இதுதான் அவர்களின் போராட்டம். அதனால் பாதிக்கப்போகும்
பள்ளிக்குழந்தைகளையோ, அன்றாட சாப்பாட்டிற்க்கு நடைபாதையை நம்பி வாழும் சிறு வியாபாரிகளையோ,
உறவினரின் இறுதிசசடங்கில் கலந்து கொள்ள முடியாமல் தவிக்கும் மனங்களையோ, பாதியில் பேருந்து
நிலையத்தில் நின்றுகொண்டு தன் ஊருக்கும் திரும்ப முடியாமல், வந்த இடத்திற்கு போக முடியாமல்
கை பிசையும் மனிதர்களை இவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இவர்களுக்குத் தேவையானது
எல்லாம் மறுநாள் செய்த்திதாள்களில் எல்லாம் யாருடைய பெயர், புகைப்படம், கல்லூரி என்பதுதான்,
நான் இளநிலை படித்துக்கொண்டிருந்த காலங்களில், பேருந்து நேரத்திற்கு வரவில்லை என்றாலோ,
இல்லை தங்கள் நிறுத்ததில் நிறுத்தாமல் சென்றாலோ பணிநடத்துனரை அடிக்கும் அளவிற்கெல்லாம்
சென்றிருக்கின்றனர் மாணவர்கள். ஏன் அதெல்லாம் அவர்களுக்குத் தோணாமல் போனது.இங்குதான்
நாம் அவர்களின் அரசியல் உணர்வை புரிந்து கொள்ள வேண்டும். பந்த் நடைபெறும் நேரத்தில்
ஒரு இருசக்கர வாகனத்தை வைத்துக்கொண்டு , நகரைச்சுற்றி வந்து, எல்லாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதா
என பரிசோதித்து அப்படி அடைக்கப்பட்டிந்தால். தங்களுடையப் போராட்டம் முழுவெற்றி என்
மார்தட்டிக்கொள்ளும் மனநிலைதான் இதன் பின்னனி.
இக்கட்டுரை பலருக்கு
கோபத்தை ஏற்படுத்தாலாம். நீங்கள் என்னிடம் கேட்கலாம் ஒரு இடத்திலும் சில மாணவர்கள்
செய்யும் தவறால் மொத்த மாணவர்கள் போராட்டத்தையும் கல்ங்கப்படுத்தலாமா என்று. ஒரு விசயம்
நான் தெளிவாகக் சொல்வது. என்னைப்போல் அங்கும் அவர்களை யாரோ ஒருவர் கவனித்துக் கொண்டிருப்பார்கள்
என்பதுதான்.
“உங்களில்
உண்மையை உணராதவர் முதலில் இதன் மேல்
கல்லெறியக் கடவன்”
No comments:
Post a Comment